பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர், சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள் , வீடியோக்கள் அதிக அளவில் பரவி வருவதாக சர்வதேச போலீசாருக்கு (இன்டர்போல்) அதிக புகார்கள் எழுந்தது. இதை தொடர்ந்து சர்வதேச போலீஸ் நடத்திய விசாரணையில் அதிக அளவு ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்யப் படுவது கேரளாவிலிருந்து என தெரிய வந்தது.
இதனால் சர்வதேச போலீஸ் , கேரளா போலீசாரிடம் தகவல் தெரிவித்தது.மேலும் சர்வதேச போலீசார் உடனடியாக அந்த கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரளா போலீசாருக்கு கோரிக்கை வைத்தது.
இந்நிலையில் கேரளா சைபர் கிரைம் ஏடிஜிபி மனோஜ் ஆபிரகாம் தலைமையில் ஆப்ரேஷன் பி-ஹண்ட் என்ற பெயரில் ஒரு தனிப்படை அமைத்தது. மேலும் இந்த கும்பலை பிடிக்க வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் உள்ள குரூப்களை இந்த தனிப்படை ரகசியமாக கண்காணித்து வந்தது.
அதில் 100-க்கும் மேற்பட்ட குரூப்களில் 18 வயதிற்கு குறைவாக உள்ள சிறுவர், சிறுமிகளின் புகைப்படங்கள் வீடியோக்கள் பகிரப்பட்டு வருவதாக தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த தனிப்படை நேற்று கேரளா மாநிலத்தில் பல இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சமூக வலைதளங்களில் ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்த திருவனந்தபுரத்தை சேர்ந்த 12 பேரை இந்த தனிப்படை கைது செய்தனர்.
ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்ய வைத்து இருந்த லேப்டாப் , செல்போன் , மெமரி கார்டு போன்ற பொருட்களை போலீசார் கைப்பற்றினர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ஆபாச படங்களை பார்ப்பது, பகிர்வது, வைத்திருப்பது குற்றமாகும். இதற்கு தண்டனை ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் , 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என கூறினார்.
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…