நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகம்.
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக 3 ஆம் கட்ட ஊரடங்கை மத்திய அரசு மே 17 ஆம் தேதி வரை நீடிக்கப்படுவதாக அறிவித்தது. கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் இருந்தாலும், இந்த ஊரடங்கு காலத்தில் சில தளர்வுகளுடன் கூடிய புதிய வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிடப்பட்டது. இதனிடையே கொரோனா பாதிப்பு தினந்தோறும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தொடர்பான தகவல்களை மத்திய சுகாதாரத்துறை தினமும் அறிவித்து வருகிறது.
அதன்படி, இன்று நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 52,952 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 1,783 ஆகவும் உள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 15,267 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை 16,758 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் 651 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 3,094 பேர் குணமடைந்துள்ளனர்.
நாட்டிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு கொரோனா பரவி வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 1233 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு 16,758 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. மகாராஷ்டிராவை மாநிலமாக கொண்ட மும்பை மற்றும் புனேவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகபட்சமாக ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…