ஒடிசா ரயில் விபத்து : 18 ரயில்கள் ரத்து.! 7 ரயில்கள் மாற்றம்.!

Train

ஒடிசா பாலசோர் பகுதி ரயில் விபத்து காரணமாக இதுவரை 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 7 ரயில்கள் தடம் மாற்றம் செய்யப்பட்டுள்ன.  

ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்திலுள்ள பாஹாநகர் சந்தை ரயில் நிலைய பகுதியில் கர்நாடகாவின் பெங்களூர் நகரில் இருந்து மேற்கு வங்கத்தின் ஹவரா நகருக்கு சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் (தடம் புரண்டரயில்) மீது மேற்கு வங்கத்திலிருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த சென்னை – கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த கோர சம்பவத்தில் எதிரே வந்த சரக்கு ரயிலும் விபத்தில் சிக்கியது.

இந்த கோர விபத்தின் காரணமாக பாலசோர் ரயில் தடம்  வழியாக செல்லக்கூடிய 7 ரயில்கள் டாடா நகர் ரயில் நிலையம் வழியாக திருப்பி விடப்பட்டன. மேலும், அவ்வழியாக செல்ல இருந்த 18 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ள்ளது. இந்த ரயில் விபத்தில் இதுவரை 233 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்