குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் காலை வரை 1.7 முதல் 3.3 ரிக்டர் அளவிலான 19 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எந்தவொரு உயிரிழப்பு அல்லது பொருட்சேதம் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
காந்திநகரத்தை தளமாகக் கொண்ட நில அதிர்வு ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.எஸ்.ஆர்) ஒரு மூத்த அதிகாரி இந்த நிகழ்வுகளை “பருவமழையால் ஏற்பட்டநில அதிர்வு” என்று கூறினார். பொதுவாக குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியத்தின் ஒரு சில பகுதிகளில் இரண்டு மூன்று மாதங்கள் பெய்த கனமழையால் இது ஏற்பட்டது, கவலைப்பட எதுவும் இல்லை என்று கூறினார்.
அதிகாலை 1.42 மணி முதல், 19 நிலநடுக்கங்கள், 1.7 முதல் 3.3 வரை ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுராஷ்டிராவின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள தலாலாவின் கிழக்கு-வடகிழக்கு (ENE) மையப்பகுதிகளில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கங்களில் பெரும்பாலானவை 3 ரிக்டர் அளவில் குறைவானவை என்றாலும், 6 நிலநடுக்கம் 3 -க்கும் மேற்பட்ட ரிக்டர் அளவில் பதிவாகியது. இதில் 3.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் அதிகாலை 3.46 மணிக்கு பதிவாகியுள்ளது. அதன் மையப்பகுதி 12 கி.மீ. இல் இருந்தது.
3.2 ரிக்டர் அளவிலான சமீபத்திய நிலநடுக்கம் காலை 9.26 மணியளவில் தலாலாவின் 11 கி.மீ மையப்பகுதியில் உணரப்பட்டது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…