200 யூனிட் இலவசம்…மின் கட்டணம் உயர்வு.! கர்நாடக அரசின் அடுத்தடுத்த அதிரடி உத்தரவுகள்….

Electricitybill

கர்நாடகாவில் 200 யூனிட்களுக்கு மேல் மின் பயன்பாடு இருந்தால் ஒரு யூனிட்டுக்கு ரூ.2.89 கூடுதலாக செலுத்த வேண்டும்.

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 5 வாக்குகளை நிறைவேற்றுவதாக கூறியிருந்தது. இதனையடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதில் கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றனர்.

இதன்பின், கர்நாடக முதல்வர் சீதாராமன் தலைமையில் மாநிலத்தின் முதல் முதலமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார். அந்த கூட்டத்தில் 5 முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதோடு, திட்டங்கள் அமலுக்கு வரும் தேதியையும் சித்தராமையா அறிவித்தார்.

இதில் ‘க்ருஹா ஜோதி’ என்ற திட்டத்தின் கீழ் கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும் இந்த திட்டம் ஜூன் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திட்டத்தின் விரிவான வழிகாட்டுதல் மற்றும் நிபந்தனைகளை மாநில அரசு வெளிட்டுள்ளது.

அதன்படி, மாநிலத்தின் மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ.2.89 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்கள் மின் கட்டணத்தை செலுத்தும்போது 200 யூனிட்டுகளுக்கு மேல் மின் பயன்பாடு இருந்தால், ஒரு யூனிட்டுக்கு ரூ.2.89 கூடுதலாக செலுத்த வேண்டும். இந்த மின் கட்டண உயர்வால் கர்நாடக முழுவதும் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்