கொரோனா நிதியுதவியின் 2 வது தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
கொரனோ நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கை தெரிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்ற உடனே தனது முதல் கையெழுத்தாக கொரனோ நிவாரண நிதி திட்டத்திற்கு கையெழுத்திட்டார்.
இந்த நிவாரண தொகை 2 தவணையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த மாதம் முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா நிதியுதவியின் 2 வது தவணை ரூ.2000 வழங்கும் திட்டத்தை இன்று முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 10 பேருக்கு நிவாரண நிதியை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குகிறார். மேலும், இன்று மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அதில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்தையும், கோயில்களில் வேலைபார்க்கும் பூசாரிகள்,பட்டாச்சார்யர்கள், அர்ச்சகர்களுக்கு ரூபாய் 4,000 நிவாரணமும், 10 கிலோ அரிசி ,15 வகை மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது.
கொரோனா பாதிக்கப்பட்டு பத்திரிக்கையாளர்கள் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் உயர்த்தப்பட்ட திட்டம், திருநங்கைகள் கட்டணம் இல்லாமல் பேருந்தில் பயணிக்க அனுமதி, மருத்துவ மற்றும் காவலர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறயுள்ளது.
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ரோடு ஷோ தொடங்கியது. அதன்படி, திருச்சிற்றம்பலம் கூட்ரோடு…
லார்ட்ஸ் : இங்கிலாந்தின் லார்ட்ஸில் நடந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்டில், டாஸ் வென்று முதலில்…
லார்ட்ஸ் : இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 387 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ்…
பாண்டிச்சேரி : புதுச்சேரியில் பாஜகவை சேர்ந்த தீப்பாய்ந்தான், ராஜசேகரன், செல்வம் ஆகிய மூன்று பேரை நியமன சட்டமன்ற உறுப்பினர்களாக நியமிக்க…
திண்டுக்கல் : பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை வரும் ஜூலை 15, 2025 முதல் 31 நாட்களுக்கு…