மத்திய பிரதேசத்தின் முன்னாள் துணை முதல்வர் பியர்லால் கன்வார் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் 3 பேர் ஒரே நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கோர்பா எனும் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் முன்னாள் துணை முதல்வர் வீட்டில் 3 பேர் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர். கோர்பா மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய முன்னாள் துணை முதல்வர் பியாரிலால் கன்வார் அவர்களின் மகன், மருமகள் மற்றும் 5வயது பேத்தி ஆகிய மூவரும் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் முன்னாள் துணை முதல்வரின் மகன் ஹரிஷ் கன்வார், மருமகள் சுமித்ரா கன்வார் மற்றும் பேத்தி ஆஷி கன்வார் ஆகியோரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இவர்கள் கூர்மையான ஆயுதங்கள் கொண்டு தாக்கப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரி அபிஷேக் மீனா தெரிவித்துள்ளார். மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் சிலர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் துணை முதல்வர் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…