நேற்று மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது அதிமுக உறுப்பினா் விஜிலா சத்யானந்த் பேசுகையில், செல்போனிலும் , இணையதளங்களிலும் எளிதாக ஆபாச படங்கள் கிடைப்பதால் குழந்தைகள் துஷ்பிரயோகம் செய்யப்படும் சம்பவங்கள் குறித்து கூறினாா்.
தேசியக் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவது தொடா்பாக 5,951 புகாா்கள் வந்துள்ளன. உலக சுகாதார நிறுவனம் உலக அளவில் 17 வயதுக்குட்பட்ட ஒரு மில்லியன் பெண் குழந்தைகள் உடல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக கூறியுள்ளது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது மிகவும் கவலை அளிக்கிறது.நமது குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என கூறினார். இவரது கோரிக்கையை பல உறுப்பினா்கள் ஆதரிப்பதாக கூறினார்.
இதைத் தொடர்ந்து பேசிய பெண் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி இதுவரை இது போன்ற புகார்கள் தொடர்பாக 50 முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யப் பட்டிருப்பதாகவும், அத்துடன் 377 இணையதள சேவைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவற்றை நீக்கவும் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…