‘ஜல் சக்தி’ வாப்கோஸ் நிறுவன முன்னாள் இயக்குநர் வீட்டில் சிபிஐ சோதனை.! 38 கோடி ரூபாய் பறிமுதல்.?

ஜல்சக்தி திட்டத்தின் கீழ் செயல்படும் WAPCOS நிறுவன முன்னாள் தலைவர் குப்தாவுக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் 38 கோடிரூபாய் வரையில் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்கும் நோக்கில் மத்திய அரசு ஜல் சக்தி எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தி, அந்த திட்டம் மூலம் அனைவருக்கும் குடிநீர் இணைப்புகளை வழங்கி வழங்கி வருகிறது. வாட்டர் அண்ட் பவர் கன்சல்டன்சி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட் (WAPCOS) எனும் நிறுவனமும் இந்த திட்டத்தின் கீழ் அரசு ஒப்பந்த அடிப்படையில் செயல்படுத்தி வந்தது.
அந்த நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் ஏப்ரல் 1, 2011 முதல் மார்ச் 31, 2019 வரையிலான காலகட்டத்தில் ராஜிந்தர் குமார் குப்தா பதவியில் இருந்தார். அவர் அந்த பதவியில் இருந்து விலகிய பின்னர் அவர் மீது பல்வேறு குற்றசாட்டுகள் எழுந்தன. அதன் பெயரில் அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து நேற்று அவருக்கு சம்பந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
டெல்லி, குருகிராம், சண்டிகர், சோனேபட் மற்றும் காஜியாபாத் ஆகிய இடங்களில் உள்ள 19 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினர். இந்த சோதனையில், 38 கோடி ரூபாய் (தோராயமாக) வரையில் கைப்பற்றபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.