ஆட்டை திருடுவதற்காக 12 வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த 4 பேர் கைது!

Published by
Rebekal

ஆட்டை திருடுவதற்காக 12 வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள மன்சூர் எனுமிடத்தில் 12 வயது சிறுவன் ஒருவன் அவனது வீட்டில் உள்ள ஆடுகளை மேய்ப்பதற்காக அருகிலுள்ள காட்டிற்கு சென்று ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, அந்த சிறுவனை சிலர் பின் தொடர்ந்து அவனது ஆடுகளில் ஒன்றை பிடிக்க முயன்றனர். இதனால் அந்த சிறுவன் கோபமுற்று அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ள்ளான். எனவே அவர்கள் அந்த சிறுவனை கழுத்தை பிடித்து நெரித்து பெரிய கல் ஒன்றை வைத்து அடித்துள்ளனர், இதில் சம்பவ இடத்திலேயே அச்சிறுவன் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளான். பின் சிறுவனை காணவில்லை என குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் தேட ஆரம்பித்துள்ளனர், அப்பொழுது ஆடு மேய்க்கச் சென்ற சிறுவன் காட்டில் இறந்து கிடந்ததை போலீசார் கண்டுள்ளனர்.

மேலும், அவர்கள் அனைவரும் அந்த சிறுவன் ஆட்டை மேய்ப்பதற்காக வெளியில் கொண்டு செல்லும் போதே அவனை பின் தொடர்ந்து சென்று உள்ளனர். அவர்கள் வேறு யாரும் இல்லை அதே கிராமத்தில் வசிக்க கூடிய சஞ்சய் நிர்மல்தான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் சஞ்சய் தான் முக்கிய குற்றவாளியாக போலீசார் கருதுகின்றனர். அதன்பின் இதற்கு உடந்தையாக இருந்த மேலும் மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சிறுவனின் கொலை குறித்து அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஒரு ஆட்டிற்காக  சிறுவனை கொலை செய்த சம்பவம் மன்சூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

INDvsENG : “ஆரம்பே அமர்க்களம்”..இங்கிலாந்தை திணற வைத்த நிதிஷ் குமார் ரெட்டி!

INDvsENG : “ஆரம்பே அமர்க்களம்”..இங்கிலாந்தை திணற வைத்த நிதிஷ் குமார் ரெட்டி!

லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…

6 minutes ago

அதிமுக – பா.ஜ.க. கூட்டணியால் முதல்வருக்கு காய்ச்சல்! நயினார் நாகேந்திரன் பதிலடி!

சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…

1 hour ago

ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…

2 hours ago

எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் மாதிரி விஜய் அரசியல் செய்யணும்- ரோஜா அட்வைஸ்!

திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…

2 hours ago

INDvsENG : ‘வா வந்து பாரு’…ஆர்ச்சருக்கு அலர்ட் கொடுத்த ரிஷப் பண்ட்!

லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…

3 hours ago

அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது! ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ள நிலையில், இன்று கும்பகோணத்தில் நடைபெற்ற பாட்டாளி…

4 hours ago