மேற்குவங்கம், அசாம் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பகல் 1 மணி நிலவரப்படி அசாமில் 37.06 சதவீத வாக்குகளும், மேற்குவங்கத்தில் 40.73 சதவீத வாக்குகள் பதிவானது.
மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் முதல்கட்ட வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்கத்தில் உள்ள 30 தொகுதிகளில் மொத்தமாக 191 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அசாமில் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்கள் போட்டியிடுகினறனர். இந்த தேர்தலில் 73 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ள நிலையில், இதற்காக 10,288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மாநிலங்களில் காலை முதல் மக்கள் ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும், கொரோனா பரவல் காரணமாக வாக்களர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கையாளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்பொழுது பகல் 1 மணி நிலவரப்படி அசாமில் 37.06 சதவீத வாக்குகளும், மேற்குவங்கத்தில் 40.73 சதவீத வாக்குகள் பதிவானது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…