எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்து 40 வயது நபர் உயிரிழப்பு …!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள விஜயவாடா நகரில் வசித்து வரும் ஒருவரது வீட்டில் நேற்று அதிகாலை எலக்ட்ரிக் பைக் பேட்டரி வெடித்ததில் 40 வயது நபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். எலக்ட்ரிக் பைக் பேட்டரி சார்ஜ் போட்டுவிட்டு அவர் தூங்கியதாக கூறப்படுகிறது.
அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அதிகாலை நேரத்தில் அந்த பேட்டரி வெடித்துள்ளது. இதனால் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது மனைவி தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவரது இரண்டு குழந்தைகளும் இந்த விபத்து காரணமாக மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டதாகவும், ஆனால் அவர்களது நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் தெலுங்கானாவில் இதே போல எலக்ட்ரிக் வாகன பேட்டரி வெடித்து 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025