மேற்கு வங்கத்தில், ராஜ் பவனில் ஆளுநர் ஜகதீப் தங்கர், ஒரே நேரத்தில் 43 அமைச்சர்களுக்கும் பதவியேற்பு பிரமாணத்தை செய்து வைத்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 215 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாரதிய ஜனதா 77 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இடம்பிடித்துள்ளது.
இந்த நிலையில், மம்தா பானர்ஜி அவர்கள் மே 5-ஆம் தேதி, மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். இவர் பெங்காலி மொழியில் 21ஆவது முதல்வராக பதவியேற்றார். இதனை தொடர்ந்து, ராஜ் பவனில் ஆளுநர் ஜகதீப் தங்கர், ஒரே நேரத்தில் 43 அமைச்சர்களுக்கும் பதவியேற்பு பிரமாணத்தை செய்து வைத்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி உட்பட மொத்தம் 17 புதிய முகங்கள் மம்தா பானர்ஜியின் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக இந்த பதவி ஏற்பு நிகழ்வு மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றுள்ளது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…