தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Cyber Crime

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார்.

ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள் இந்தியாவில் பரவலாக நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களில் மட்டும் நம் நாட்டில் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான தனி நபர்கள் இது போன்ற மோசடிகளில் சிக்கி பல லட்சங்களை இழந்துள்ளனர். அதே போல கடந்த சில நாட்களுக்கு முன் பெங்களுருவில் 52 வயதான தொழிலதிபர் ஒருவர் இது போன்ற மோசடியில் சிக்கி ரூ.5.2 கோடி இழந்துள்ளார்.

கடந்த மார்ச்-11 ம் தேதி அன்று பாதிக்கப்பட்ட தொழிலதிபர் சரத்துக்கு வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்கிறது. அதில் லாபகரமான பங்குச் சந்தை வருமானத்தை ஈட்ட வேண்டும் என்றால் bys-app.com யிலிருந்து ஒரு ஆப்பை பதிவிறக்கம் செய்யும்படி இருந்தது. ஆனால் அவர் அதை க்ளிக் செய்யாமல் புறக்கணித்தார். பின் Y-5 எவர் கோர் ஃபைனான்சியல் லீடர் (Y-5 Ever Core Financial Leader) என்ற வாட்ஸ்-ஆப் குரூப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்த பாதிக்கப்பட்ட தொழிலதிபர் சரத் அதையும் புறக்கணித்துள்ளார். மேலும், அந்த மோசடி கும்பல் இவரிடமிருந்து எந்த ஒரு பதிலும் வராததால் இவரை பல முறை தெரியாத எண்களில் இருந்து போன் செய்து  அந்த ஆப்பை பதிவிறக்கம் செய்ய ஆசை வார்த்தைகள் பேசி அவரை தூண்டி உள்ளனர். ஆரம்பத்தில் அவர் தயங்கினாலும், இறுதியில் இதை ஒரு முறை முயற்ச்சித்து பாப்போம் என மனமிறங்கி சரத் அந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளார்.

கடந்த ஏப்ரல்-2 ம் தேதிக்குள் அந்த மோசடி கும்பல் பொய்யான சில வங்கி கணுக்குகளை காண்பித்து அவரை நம்ப வைத்து அந்த கணுக்குகளில் சிறுது சிறுதாக பணத்தை முதலீடு செய்ய வைத்து மொத்தமாக ரூ.5.2 கோடியை முதலீடு செய்ய வைத்துள்ளனர். சிறுது நாட்களுக்கு பிறகு தமக்கு லாபம் ஏதும் வராமல் இருக்கையில், பாதிக்கப்பட்டவர் தனது லாபத்தில் சிலவற்றை திரும்பப் பெற முயன்றபோது மோசடி செய்பவர்கள் மறுத்துவிட்டனர்.

அப்போது தான் அவருக்கு தாம் மோசடி கும்பலால் ஏமாற்ற பட்டுளோம் என உணர்ந்துள்ளார். அதன் பின் பெங்களூரு காவல் துறைக்கு அவர் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் எஃப்.ஐ.ஆர் (FIR ) மற்றும் ஐடி சட்டத்தின் கீழ் வழக்கு பதிவுசெய்து இந்த குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts