2020 ஜூலை இறுதிக்குள் இந்தியாவில் 5 ரபேல் போர் விமானங்கள் களமிறக்கப்படும் என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. ஜூலை 29-ம் தேதி விமானப் படையில் இந்த ரபேல் விமானங்கள் சேர்க்கப்படும் எனவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
இந்த அதிநவீன போர் விமானமானது, ஆகஸ்ட் 20ம் தேதிக்கு பின்னர் விமானத்தை இயக்குவது குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் எனவும் இந்திய விமானப்படை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஃபேல் விமானங்களில் வரவுகளை அதிகபடுத்துமாறு இந்தியா பிரான்சிடம் கேட்டுக்கொண்டுள்ளது. முதலில் ஜூலை இறுதிக்குள் நான்கு ரபேல் விமானங்கள்தான் இந்தியாவிற்கு கொண்டு வருவதாக ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனா, பாகிஸ்தானில் உள்ள ராணுவ விமானங்களை விட இலக்குகளை குறிவைத்து தாக்குவதில் ரபேல் விமானம் சிறந்தது எனவும், அதிகபட்சமாக 150 கிலோ மீட்டர் வரையிலான இலக்குகளை துரத்தி அழிக்கும் வல்லமை கொண்டது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் சீனா நாடுகளில் ரபேல் விமான குறியில் இருந்து தப்பும் திறன் கொண்ட விமானங்கள் இல்லை எனவும் கூறப்படுகிறது.
2016ம் ஆண்டு 59 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 36 ரபேல் விமானங்கள் வாங்குவதற்காக பிரான்ஸ் நாட்டு நிறுவனத்துடன் கையெழுத்திடப்பட்டது. இவை அம்பாலா மற்றும் ஹசிமாரா (மேற்கு வங்காளம்) ஆகிய விமானப்படை தளத்தில் களமிறக்கப்பட உள்ளது.
இதுதொடர்பாக இந்திய விமானப்படையின் சார்பாக படை தளபதிகளின் ஆலோசனை கூட்டம் வரும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை டெல்லியில் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்க உள்ளார். இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் மற்றும் விமானப்படையின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…