#ElectionBreaking: முதற்கட்ட வாக்குப்பதிவு தீவிரம்.. மேற்குவங்கத்தில் 55.27 சதவீத வாக்குகள் பதிவு!

Default Image

மேற்குவங்கம், அசாம் மாநிலத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், நண்பகல் 3 மணி நிலவரப்படி அசாமில் 47.10 சதவீத வாக்குகளும், மேற்குவங்கத்தில் 55.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளிலும், அசாமில் 47 தொகுதிகளிலும் முதல்கட்ட வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்கத்தில் உள்ள 30 தொகுதிகளில் மொத்தமாக 191 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். அசாமில் 47 தொகுதிகளில் 264 வேட்பாளர்கள் போட்டியிடுகினறனர்.

இந்த தேர்தலில் 73 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ள நிலையில், இதற்காக 10,288 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் காலை முதல் முதல்வர், அமைச்சர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் ஆர்வமாக வந்து வாக்களித்து வருகின்றனர். இந்த வாக்குப்பதிவு முடிய இன்னும் வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக வாக்களர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கையாளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தற்பொழுது நன்பகல் 3 மணி நிலவரப்படி அசாமில் 47.10 சதவீத வாக்குகளும், மேற்குவங்கத்தில் 55.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war