கொரோனா இரண்டாம் அலையில் இதுவரை 594 மருத்துவர்கள் நாடு முழுதும் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. தினமும் லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்படும் நிலையில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நெருக்கடி கால கட்டத்தில் முன்கள பணியாளர்களாக பணியாற்றக்கூடிய மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், காவலர்கள் பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலர் கொரோனாவால் பாதிக்கப்படுவதுடன் உயிரிழக்கவும் செய்கின்றனர்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் உறவினர்களே வர அச்சப்பட்டாலும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கொரோனா இரண்டாம் அலையில் மட்டும் அதிக அளவில் மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுவரை நாடு முழுவதும் 594 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக தற்பொழுது இந்திய மருத்துவ சங்கம் தனது பதிவேட்டில் குறிப்பிட்டுள்ளது.
மேலும் தமிழகத்தில் இதுவரை 21 மருத்துவர்கள் கொரோனா இரண்டாம் அலைக்கும் பலியாகி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிகமாக டெல்லியில் 107 மருத்துவர்களும், பீகாரில் 96 மருத்துவர்களும், உத்தர பிரதேசத்தில் 67 மருத்துவர்களும், ராஜஸ்தானில் 43 மருத்துவர்களும் உயிரிழந்துள்ளனர்.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை : தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் களம் இப்போதே சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தேர்தல்…
பெங்களூர் : ஐபிஎல் 2025 சீசனின் லீக் கட்டம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், மே 17, 2025 அன்று பெங்களூருவில்…
சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் ஒரு வழியாக நின்ற நிலையில் பதற்றம் நாடுகளின்…
கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…