Maharashtra Car Enters [file image]
மகாராஷ்டிரா : மும்பை-நாக்பூர் விரைவுச் சாலையில் கட்வாஞ்சி கிராமத்திற்கு அருகே இரண்டு கார்கள் மோதியதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஸ்விப்ட் டிசையர் கார் ஒன்று பல பொருட்களை ஏற்றிக்கொண்டு நெடுஞ்சாலையில் தவறான வழியில் சென்று நாக்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த எர்டிகா காரின் மீது மோதியதில் கோர விபத்து ஏற்பட்டது.
இந்த கோர விபத்தில் எர்டிகா கார் காற்றில் வீசப்பட்டது, நெடுஞ்சாலையின் தடுப்பில் தரையிறங்கியது, காரில் பயணித்த பயணிகள் சாலையில் தூக்கி எறியப்பட்டனர். சம்பந்தப்பட்ட மற்ற கார் கடுமையாக சேதமடைந்து, உருக்குலைந்த உலோகமாக மாறியது.
இந்த பயங்கர விபத்தில் சிக்கிய 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், அவர்களின் உடல்கள் ரத்தம் வெள்ளத்துடன் சாலையில் கிடைக்கும் காட்சிகள் குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது.
விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சமுருத்தி நெடுஞ்சாலை போலீசாரும், ஜல்னா போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நெடுஞ்சாலையில் இருந்து இடிபாடுகளை அகற்ற கிரேன் பயன்படுத்தப்பட்டது,
இந்த சம்பவம் குறித்து முதற்கட்ட விசாரணையில், ஸ்விஃப்ட் டிசையர் கார் தவறான பக்கத்திலிருந்து நெடுஞ்சாலையில் நுழைந்து நாக்பூரில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டு இருந்த எர்டிகா கார் மீது மோதியதில் விபத்து நடந்தது தெரியவந்துள்ளது. விபத்தில் 4 பேர் காயம் அடைந்த நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…