Corona -JN1 Variant [File Image]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் (ஒரே நாளில்) 760 கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர்களில் ஒருவர் கேரளாவை சேர்ந்தவரும் மற்றொருவர் கர்நாடகாவை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளளது. இதனிடையே, நேற்றைய தினம் 775 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்தியாவில் இதுவரை 44,478,047 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதிப்பால் 5,33,373பேர் உயிரிழந்துள்ளதாகவும், 4,423 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இனி அனைத்து சேவைகளும் ஒரே ஆப்பில்.. விரைவில் ‘SUPER APP’ ..!
இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 38 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க வயதானோர், குழந்தைகள் கட்டாயமாக மாஸ்க் அணிய வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவுறித்தியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளொன்றுக்கு 20 என்ற எண்ணிக்கையில் மட்டுமே இருப்பதால் பெரிய அளவிலான பாதிப்பு இல்லை என்று குறிப்பிட்ட அமைச்சர், பொது இடங்களில் மாஸ்க் அணிவதன் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…