டெல்லியில் இரு குடோன்களிலிருந்தும் 848 கிலோ பயன்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை கையுறைகள் மீட்கப்பட்டன.
டெல்லியில் போலீசாருக்கு கிடைத்த தகவல்படி கிட்டத்தட்ட 848 கிலோகிராம் பயன்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை கையுறைகள் இரண்டு கோடவுன்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேரும் பயன்படுத்தப்பட்ட கை கையுறைகளை மறுசுழற்சி செய்து விற்பனை செய்ததில் ஈடுபட்டனர்.
பயன்படுத்தப்பட்ட அறுவை சிகிச்சை கையுறைகள் ஸ்கிராப் டீலர்களிடமிருந்து சேகரிக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் அவற்றைக் கழுவி புதிய பாக்கெட்டுகளில் அடைத்து பயன்படுத்தப்படாதவையாக விற்று லாபம் பார்த்து வர்ந்துள்ளனர்.
காவல்துறையினரின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட அருண் ஸ்ரீனிவாசன் (36), மணீஷ் குமார் (30), மற்றும் தினேஷ் குமார் ராஜ்புத் (28) ஆகியோர் கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனர். இரு குடோன்களிலிருந்தும் 848 கிலோ பயன்படுத்தப்பட்ட அறுவைசிகிச்சை கையுறைகள் மீட்கப்பட்டன. மேலும் இரண்டு குடோன்களுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளன என போலீசார் தெரிவித்தனர்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…