850கி.மீ திருமணத்துக்காக சைக்கிளில் பயணித்த மணமகன்! போலீஸ் வடிவில் அவருக்கு வந்த சோதனை!

Published by
லீனா

தனது திருமணத்துக்காக சொந்த ஊருக்கு 850 கி.மீ சைக்கிளில் பயணம்.
கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், சோனு குமார் சவுகான் என்பவர், உத்தரபிரதேச மாநிலத்தில் நேபாள எல்லை அருகே அமைந்துள்ள மகராஜ்கஞ்ச் மாவட்டம், பிப்ரா ரசூல்பூரை சேர்ந்தவர். இவர் பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள டைல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில்  பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு இவருக்கு ஏப்ரல் 15-ந் தேதி, அவரது சொந்த ஊரில் திருமணம் நடத்த பெரியவர்கள் நிச்சயம் செய்தனர். அதற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக நடந்து வந்தன. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், எல்லா போக்குவரத்து சாதனங்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதனால், தனது திருமணத்திற்கு எப்படி செல்வது என்று சோனுக்குமார், தனது நண்பர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அவர்கள் சைக்கிளில் செல்லலாம் என ஆலோசனை கொடுக்க, அந்த ஆலோசனையை ஏற்று, லூதியானாவில் இருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள சொந்த ஊருக்கு, அவர் தனது 3 நண்பர்களுடன் சைக்கிளில் சென்றுள்ளார்.
நான்கு பெரும், இரவு, பகலாக சைக்கிள் மிதித்து 850 கி.மீ. தொலைவுக்கு வந்து விட்டனர்.  12-ந் தேதி, உத்தரபிரதேச மாநிலம் பலராம்பூர் மாவட்ட எல்லைக்கு வந்தபோது, அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். வர்களை தடுத்து நிறுத்திய போலீசார், விசாரணைக்கு பின்னர் அங்குள்ள தனிமைப்படுத்தும் முகாமுக்கு அனுப்பினர்.  இதையடுத்து மணமகன் சோனு குமார் சவுகானும், அவரது 3 நண்பர்களும் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சோனுக்குமார் அவர்கள் கூறுகையில், ‘லூதியானாவில் இருந்து நாங்கள் சைக்கிளில் புறப்பட்டு 850 கி.மீ. தொலைவுக்கு வந்து விட்டோம். இங்கிருந்து எங்கள் ஊர் 150 கி.மீ. தொலைவில்தான் இருக்கிறது. ஆனால் இங்கு போலீசாரிடம் சிக்கிக்கொண்டோம். அதனால் எங்களை தனிமைப்படுத்தும் முகாமில் வைத்து விட்டனர். இரு வாரங்கள் இங்கு கண்காணிப்பில் வைத்திருப்பார்கள். எங்களை அனுமதித்திருந்தால் நிச்சயிக்கப்பட்டபடி எனது திருமணம் நடந்திருக்கும். எந்தவித ஆரவாரமும் இன்றி அமைதியாகக்கூட நடத்தி இருப்போம். ஆனால் எவ்வளவோ வேண்டி கொண்டும் போலீசார் எங்களை அனுமதிக்கவில்லை’ என வருத்தத்துடன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், அதே நேரத்தில் நல்ல ஆரோக்கியமாக இருப்பதுவும் முக்கியம்தான். திருமணத்தை பின்னர் நடத்தி கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார். பல்ராம்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேவரஞ்சன் வர்மா இதுபற்றி கூறுகையில், எங்கள் மாவட்ட எல்லைக்குள் நுழைகிறபோது சவுகானையும், அவரது நண்பர்களையும் தடுத்து நிறுத்தி விட்டோம். விதிப்படி அவர்களை தனிமைப்படுத்தி முகாமில் தங்க வைத்துள்ளோம். இரு வார காலத்தில் அவர்களது பரிசோதனை அறிக்கை வந்து விடும். அதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று தெரியவந்தால், ஊருக்கு செல்ல அனுமதி அளித்து விடுவோம் என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

11 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

12 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

13 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

13 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

14 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

14 hours ago