சிறப்பு ரயிலில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் 97 பேர் இதுவரை இறந்துள்ளார்கள் என்று ரயில்வே துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், விவாதத்தின்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரையன், ஷார்மிக் சிறப்பு ரயில்களில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளர்களில் எத்தனை பேர் உயிரிழந்தார்கள்? என்று கேள்வி எழுப்பினார். ஏன்னென்றால், ஊடகங்களில் 50க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்ததாக தகவல் வெளியாகியிருந்தது என்று தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல், இதுவரை சிறப்பு ரயிலில் பயணம் செய்த 97 பேர் இறந்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார். இந்த புள்ளி விவரங்கள் அனைத்தும் அந்தந்த மாநில காவல்துறையிடமிருந்து பெறப்பட்டுள்ளது என கூறியுள்ளார். மேலும், ஷார்மிக் ரயிலில் பயணம் செய்யும்போது உணவு மற்றும் குடிநீர் கிடைக்கவில்லை என்று 113 பேர் புகார் அளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…