இன்று கிழக்கு லடாக்கின் எல்லை பதற்றத்தை தணிப்பதற்காக சீனா – இந்தியா இடையே 9வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
இந்தியா-சீனா இடையே நீண்டகாலமாக எல்லைப் பிரச்சினை நீடித்து வருகின்ற நிலையில், லடாக் எல்லையில் பாங்கோங் சோ ஏரி பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி நுழைந்ததால் இந்தியா மற்றும் சீனா இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து சீன ராணுவம், லடாக் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் குவித்திருக்கிறது.
இதன்காரணமாக எல்லைப் பகுதியில் இந்திய வீரர்கள் வழக்கமான ரோந்து பணியை மேற்கொள்வதற்கு சீனா இடையூறாக செயல்படுவதாகவும், இதைத்தொடர்ந்து சீனாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக ராணுவப் படைகளை அனுப்பி உள்ளது. இதனால் பாங்கோங் சோ ஏரி, கால்வன் பள்ளதாக்கு, டெம்சோக் ஆகிய பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது.
இரு நாட்டிற்கும் இடையே அடிக்கடி ஏற்படும் மோதல் போக்கை தவிர்க்க பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வியில் தான் முடிந்தது.
இந்நிலையில் இன்று கிழக்கு லடாக்கின் எல்லை பதற்றத்தை தணிப்பதற்காக சீனா – இந்தியா இடையே 9வது சுற்று ராணுவ பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. இந்த பேச்சுவார்த்தை, இந்தியாவில் சுசுல் துறைக்கு எதிரே உள்ள மோல்டோவில் நடைபெறவுள்ளது.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…