கொரோனா வைரஸை கொல்லக்கூடிய புதிய முகக்கவசத்தை கண்டுபிடித்த 12-ம் வகுப்பு மாணவி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வைரஸை அழிப்பதற்கு பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இதனை தடுப்பதற்கான வழி முறைகளும், தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேற்கு வங்கம், பூர்பா பர்தாமன் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி திகாந்திகா கொரோனா வைரஸை கொல்லும் ஒரு முககவசத்தை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து அந்த மாணவி கூறுகையில், முககவசத்தில் மூன்று அறைகள் உள்ளது. இதில் முதல் அறை காற்றில் உள்ள தூசுகளை வடிகட்டும் எதிர்மறை அயன் ஜெனரேட்டர் இருப்பதாகவும், வடிகட்டப்பட்ட காற்று இரண்டாவது அறைக்குள் நுழையும்போது, அங்குள்ள சோப்பு மற்றும் தண்ணீர் கரைசல் வைரஸ்களை கொல்லும்.
மேலும் மூன்றாவது அறை ரசாயன அறையாகும். இரண்டாவது அறையில் இருந்து காற்று மூன்றாவது அறைக்குள் செல்லும் போது, அங்குள்ள ரசாயனக் கரைசல் வைரஸைக் கொல்லும் ஆற்றலைக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்த முகக்கவசத்தை தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பயன்படுத்தினால் அவர்கள் வெளியேற்றும் காற்று இதுபோன்ற செயல் முறையின் வழியாக செல்லும். இது மேலும் வைரஸ் பரவுவதை தடுக்கின்றது.
இந்நிலையில், மாணவி திகாந்திகா தன்னுடைய சோதனைக்காக மாநில சுகாதாரத்துறையை அணுகியுள்ளார். இருப்பினும் இந்த முகக்கவசம் கொடிய வைரஸை கொல்லும் என்று விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…