ராஜஸ்தான்:சக மாணவர்களுடன் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட மறுத்த 19 வயது மாணவிக்கு விஷம் கொடுத்து கொலை.
ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படிக்கும் 19 வயது கல்லூரி மாணவியை தங்களுடன் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட மறுத்ததற்காக அவரது வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் 5 பேர் விஷம் கொடுத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. தங்களுடன் பாலியல் உறவு கொள்ளுமாறு மாணவர்கள் வற்புறுத்திய நிலையில்,அதனை மாணவி மறுத்ததால்,அவருக்கு விஷம் கொடுத்துள்ளனர்.இதனால் மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து,பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை ஹலேனா காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி,இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 306 (தற்கொலைக்குத் தூண்டுதல்), 328 (விஷம் கொடுத்து கொலை செய்தல்), மற்றும் பிரிவு 341 ஆகியவற்றின் கீழ் 5 மாணவர்கள் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே,கடந்த புதன்கிழமை பிற்பகல் 3 மணியளவில்,மாணவி வீடு திரும்பும் போது 5 மாணவர்ளும் அவரைப் பின்தொடர்ந்து, வலுக்கட்டாயமாக சிறிது விஷத்தை வாயில் ஊற்றி குடிக்க வைத்தனர். மாணவி வீட்டை அடைந்ததும், வாந்தி எடுக்க ஆரம்பித்தார். அதன்பின்னர்,அம்மாணவி ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இதனைத் தொடர்ந்து,மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…