ம.பியில் பரபரப்பு.! பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர்.! உடனடியாய் கைது செய்த போலீசார்.!

Arrest

மத்திய பிரதேசத்தில் பழங்குடியினர் மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகர் காவல்துறையால் கைது செய்யபட்டுள்ளார் .

மத்திய பிரதேச மாநிலம் சித்தி தொகுதி சேர்ந்த பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா என்பவர் மனநலம் பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த வீடியோவை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து தனது கண்டனத்தை பதிவு செய்து உள்ளார். பழங்குடியினர் நலன் குறித்து பொய் பேசும் பாஜக தலைவர் பழங்குடியின ஏழை மீது இப்படி சிறுநீர் கழிக்கிறார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது என அதில் பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணையில் இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்