PM Modi CabinetMeeting [Image-PTI]
ஜூலை 3 ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியான நிலையில், பிரதமர் மோடி ஜூலை 3 இல் மத்திய அமைச்சரவையைக் கூட்டுகிறார். டெல்லியில் பிரகதி மைதானத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மாநாட்டு மையத்தில் ஜூலை 3ஆம் தேதி அமைச்சரவைக்கூட்டம் நடைபெறுகிறது.
பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் முக்கிய கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு அமைச்சரவைக்கூட்டம் கூடுவது பற்றிய தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை மாற்றுவது குறித்தும் முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதை முன்னிட்டு, மாநிலம் மற்றும் மத்திய அமைச்சரவை மாற்றம் செய்ய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, பிரதமர் மோடியுடனான கூட்டத்தில் இது குறித்து கூறியதாகக் கூறப்படுகிறது.
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க்குக்கும் இடையே ஏற்பட்ட…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாகி எலான் மஸ்க்…
நார்வே செஸ் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு…
சென்னை:சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக தனது அரசியல் பணிகளை மும்முரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக,…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, தமிழகத்தில் வரும் ஜூன் 10-ஆம்…
ஸ்டாவஞ்சர் : நார்வே செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் கடந்த மே 26 தொடங்கி விறு விறுப்பாக…