கேரள அரசியலில் ஒரு அத்தியாயம் முடிவு பெறுகிறது; உம்மன் சாண்டி மறைவுக்கு, பினராயி விஜயன் இரங்கல்.!

Ooman chandy pinarayi

முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மறைவுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி இன்று, அதிகாலை உடல்நலக்குறைவால் காலமானார். 79 வயதான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணிக்கு உம்மன் சாண்டி காலமானார்.

அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவீட்டில், கேரளாவின் அரசியல் உம்மன் சாண்டியின் மறைவுடன் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வருகிறது.

ஒரு நிர்வாகியாக, அரசியல் தலைவராக, மக்கள் பிரதிநிதியாக நமது மாநிலத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் முன்னுதாரணமாகக் கருதப்படுகிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்