பிரதமர் மோடியின் பேச்சை கேட்காத மாணவர்களுக்கு வினோத தண்டனை.! கல்லூரி நிர்வாகம் அதிரடி.!

பிரதமர் மோடியின் மான் கி பாத் நிகழ்ச்சியினை கேட்காத மாணவர்களுக்கு வினோத தண்டனையை சண்டிகர் மாநிலத்தில் ஒரு கல்லூரி நிர்வாகம் அளித்துள்ளது.
பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்று கிழமை அன்று மனதின் குரல் (மான் கி பாத்) என்ற நிகழ்ச்சியில் உரையாற்றுவார். இது ஒலி வடிவில் பல்வேறு தளங்களில் வெளியிடப்படும். இதனை பொதுமக்கள் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு பள்ளி கல்லூரிகளில் மாணவர்கள் கேட்பார்கள்.
பிரதமரின் இந்த உரையை கேட்க தவறிய கல்லூரி மாணவர்ளுக்கு சண்டிகர் கல்லூரி நிர்வாகம் வினோத தண்டனை வழங்கியுள்ளது. ஏப்ரல் 30 மனதின் குரல் 100வது நிகழ்ச்சியில் பிரதமரின் பேச்சை கேட்க சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
ஆனால் அந்த பல்கலைக்கழகத்தில் 36 மாணவர்கள் மட்டும் மான் கி பாத் நிகழ்ச்சியை கேட்கவில்லை என தெரிகிறது. இதனை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட 36 மாணவர்களை மட்டும் ஒரு வாரத்திற்கு கல்லூரி விடுதியில் இருந்து வெளியே செல்ல கூடாது என என சண்டிகர் கல்லூரி நிர்வாகம் வினோத தண்டனை அளித்துள்ளது.