டிவிட்டர் நிறுவனத்திற்கு புதிய பெண் CEO.! எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு.!

Elon musk

டிவிட்டர் நிறுவனத்திற்கு புதிய பெண் CEO தேர்ந்து எடுக்கப்பட்டதாகவும், அவர் 6 வாரத்தில் பதவி ஏற்பார் எனவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். 

உலக பணக்காரர்களில் மிக முக்கிய நபராக இருந்த எலான் மஸ்க் திடீரென டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக அறிவித்து பின்னர் பின்வாங்கி, அதற்கடுத்து நீதிமன்றம், வழக்கு என்று மாறிய பிறகு டிவிட்டர் நிறுவனத்தை வாங்கினார் எலான் மஸ்க்.

சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிடும் மிக முக்கிய தளமாக தற்போது வரை டிவிட்டர் பயன்பட்டில் இருந்து வருகிறது. மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதில் ப்ளூ டிக் கட்டணம், ஆள் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார்.

தற்போது அடுத்த புதிய மாற்றமாக டிவிட்டர் நிறுவனத்திற்கு புதிய பெண் தலைமை அதிகாரி (CEO) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் இன்னும் 6 வாரத்தில் பணியை தொடர்வார் எனவும் , அவர் டிவிட்டர் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் தலைமை அதிகாரியாக தொடர்வார் என குறிப்பிட்டுள்ளார் மஸ்க்.

புதிய தலைமை அதிகாரி வந்த பிறகு தான் , வியாபாரம், மென்பொருள் ஆகியவற்றை மேற்பார்வையிடும் நிர்வாக தலைவராக இருக்க போவதாகவும் எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்