AgastyaChauhan [Image source : file image]
பிரபல யூடியூபர் அகஸ்தியா சௌஹான் 300 கிமீ வேகத்தில் செல்ல முயன்ற யமுனா விரைவுச் சாலையில் விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தார்.
பிரபல யூடியூபரும் பைக்கருமான அகஸ்திய சௌஹான், சமூக வலைதளங்களில் ஏராளமான பின்தொடர்பவர்கள் இருந்தனர். எனவே, பைக்கில் சாகசங்கள் செய்து அதற்கான வீடியோக்களை தன்னுடைய யூடியூப் சேனல்களில் அவர் பதிவிட்டு வந்துள்ளார்.
அந்த வகையில் சமீபத்தில் யமுனா விரைவுச்சாலையின் 47 கிலோமீட்டர் மைல்கல்லில் 300 வேகத்தில் செல்ல முயன்றுள்ளார். அப்போது யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் தனது பந்தய பைக்கை ஓட்டிச் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார்.
டிவைடரில் மோதியதில் அவரது ஹெல்மெட் உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அலிகார் மாவட்டத்தின் தப்பல் காவல் நிலையம் போலீசார்கள் சம்பவ இடத்திற்கு சென்று அவருடைய உடலைக் கைப்பற்றினார்கள். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக கிரேட்டர் நொய்டாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.
அவர் பைக்கை ஒட்டி செல்லும் வீடியோ அவருடைய ஹெல்மெட்டில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த ஆண்டின் தொடக்கத்தில், டேராடூனில் உள்ள நகரச் சாலைகளில் பல்வேறு ஆபத்தான ஸ்டண்ட்களை நிகழ்த்தியதற்காக அகஸ்தியா மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…