Gomti River [file image]
உத்தரபிரதேசம் : ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற ஒருவரை மீட்ட மீனவர் கரைக்கு வந்த பிறகு கன்னத்தில் பளார் என அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் சுல்தல்பூரில் காதல் ஜோடி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்துள்ளனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியாகி மீனவர்கள் சிலர் காதல் ஜோடியை மீட்டனர்.
அப்போது, காதலனை மீட்டு கரைக்கு கொண்டு வந்தவுடன் மீனவர் “தற்கொலை செய்யவா நினைக்கிறாய் ” உயிரோட அருமை தெரியாதா? என்பது போல கூறி ஆத்திரத்துடன் அந்த நபருடைய இரண்டு கன்னங்களிலும் ‘பளார்..பளார்’ என அறைந்தார். ஆத்திரம் அடங்காத நிலையில், மீண்டும் கன்னத்தில் அடித்தார். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கோட்வாலி நகரில் உள்ள கோலாகாட் என்ற இடத்தில் காதல் ஜோடி கோமதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஆற்றில் குதித்து தண்ணீரை குடித்த இளம்பெண் உடல்நிலை சரியில்லாமல் போன் நிலையில், இதையடுத்து, இருவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும், கடந்த இரண்டு நாட்களில் இந்த காதல் ஜோடியின் இரண்டாவது தற்கொலை முயற்சி இது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று கோமதி ஆற்றில் குதித்து இந்த காதல் ஜோடி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நிலையில், சரியான நேரத்தில் மீனவர் ஆற்றில் குதித்த காரணத்தால் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…
டெல்லி : நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ஆம் தேதி தொடங்கியது. கிட்டத்தட்ட இன்னும் 2 வாரங்களில்…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மேற்கொள்ளும் தாக்குதல் நடவடிக்கைகளை…
சென்னை : தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இரு நாட்டு…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…