அதிகாலை 1.23 மணிக்கு மேகாலையாவில் நில நடுக்கம்….

மேகாலயாவில் உள்ள ரி போய் பகுதியில் இன்று அதிகாலை சரியாக 1.23 மணியளவில் லேசான நிலநடுக்கம்
வட கிழக்கு மாநிலங்களான ஏழு சகோதரி என அழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களின் நில அமைப்பின் காரணமாக அவ்வபோது நில நடுக்கம் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது மேகாலயாவில் உள்ள ரி போய் பகுதியில் இன்று அதிகாலை சரியாக 1.23 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இந்த நில அதிர்வு ரிக்டர் அளவு கோளில் 2.9 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது. இதனால் ஏற்பட்ட சேதம் உள்ளிட்ட எந்த விவரங்களும் தற்போது வெளிவரவில்லை.