அமேசானில் மவுத்வாஷ் ஆர்டர் செய்த மும்பையைச் சேர்ந்த ஒருவருக்கு, மவுத்வாஷிற்கு பதிலாக ரெட்மி நோட் 10 மொபைல்போன் கிடைத்துள்ளது.
மும்பையைச் சேர்ந்த லோகேஷ் தாகா என்பவர் ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசானில் மவுத்வாஷ் ஆர்டர் செய்துள்ளார்.ஆனால், மவுத்வாஷிற்கு பதிலாக ரெட்மி நோட் 10 மொபைல்போனைப் பெற்றுள்ளார்.
இதனையடுத்து,லோகேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து கூறியதாவது,”வணக்கம்,நான் நான்கு கோல்கேட் மவுத்வாஷ் ஆர்டர் செய்தேன்.அதற்காக ரூ.396 கட்டணமாக வசூலிக்கப்பட்டன.மேலும், கட்டணம் செலுத்திய பின்பு அதற்கான ஆர்டர் நம்பர் 406-9391383-4717957 ஐப் பெற்றேன்.
இந்நிலையில்,டெலிவரி செய்யப்பட்ட பார்சலில் மவுத்வாஷிற்குப் பதிலாக எனக்கு ரெட்மி நோட் 10 கிடைத்துள்ளது.எனவே,இந்த ரெட்மி மொபைல் போனை திரும்பக் கொடுக்க முடிவு செய்து செய்தேன்.ஆனால்,அமேசான் ஆப் வழியாக திரும்பக் கொடுக்க முடியவில்லை.
இருப்பினும்,பார்சலின் முன்பக்கத்தில் உள்ள பேக்கேஜிங் லேபிளில் என்னுடைய பெயர் இருந்தது.ஆனால்,அதன் உள்ளே இருந்த பில்லில் தெலுங்கானாவைச் சேர்ந்த வேறு ஒருவருடைய பெயர் இருந்தது.எனவே ,சம்மந்தப்பட்டவரிடம் மொபைல்போனை ஒப்படைபதற்காக நான் அமேசானிற்கு இ-மெயில் செய்துள்ளேன்”,என்று தெரிவித்திருந்தார்.
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27),…
விருதுநகர்: சிவகாசி அருகே சின்னகாமன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலை வெடி விபத்தில் நேற்று 8 பேர் உயிரிழந்த நிலையில், படுகாயம்…
சென்னை : தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி (ADGP) டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பல…
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்டது. தேர்வர்கள் தங்களது…
சிவகங்கை : திருப்புவனத்தில் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் வழக்கில் பெரும் திருப்பம் ஏற்பட்டுள்ளது.…
வாஷிங்டன் : ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு, 500 சதவிகிதம் வரி விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.…