காயத்திற்கு மருந்துக்கு பதில் பசையை ஒட்டி அனுப்பிய மருத்துவர்கள்.! பெற்றோர்கள் அதிர்ச்சி.!

தெலுங்கானாவில் ஒரு சிறுவனுக்கு தனியார் மருத்துவர் ஒருவர் தையல் போடுவதற்கு பதில் பெவிக் விக் ஒட்டியுள்ளார்.
தெலுங்கானாவில் ஆயிஜாவில் வம்சிகிருஷ்ணா – சுனிதா தம்பதியினரின் மகன் பிரவீன் எனும் சிறுவனுக்கு இடது கண்ணின் மேல் பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரது பெற்றோர்கள் அழைத்து சென்றனர். அப்போது அங்கிருந்த மருத்துவர் சிகிச்சை அளித்துள்ளார்.
அதாவது, நெற்றியில் தையல் போட வேண்டிய நிலைமை இருந்துள்ளது. ஆனால் தனியார் மருத்துவமனை மருத்துவர் அந்த இடத்தில் தையல் போடாமல் பெவிக் விக் எனப்படும் பசையை கொண்டு ஒட்டியுள்ளார். இந்த சம்பவத்தை கண்டு பெற்றோர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தெலுங்கானாவில் இந்த சம்பவம் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.