RCBvsDC: டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங் தேர்வு.!!

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7:30 மணிக்கு நடைபெறும்

RCB VS DC

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7:30 மணிக்கு நடைபெறும் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

இந்த போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்த இரு அணிகளும் மோதிய முதல் போட்டியில் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்றது.புள்ளி பட்டியலில் பெங்களூர் அணி 10 புள்ளிகள் எடுத்து 5வது  இடத்திலும் டெல்லி அணி 6 புள்ளிகள் எடுத்து 10-வது  இடத்திலும் உள்ளது

டெல்லி கேப்பிட்டல்ஸ்

டேவிட் வார்னர், பிலிப் சால்ட், மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், மணீஷ் பாண்டே, அமன் ஹக்கிம் கான், அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ், அனுஜ் ராவத், க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், வனிந்து ஹசரங்கா, கர்ண் சர்மா, முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்