தாம்பூல பையில் குவாட்டர் பாட்டில்..! நூதன முறையில் நடைபெற்ற திருமணம் வரவேற்பு நிகழ்ச்சி..!

புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூல பையில் மாதுபாட்டில் வைத்து கொடுத்துள்ளனர்.
பொதுவாக திருமண விழாக்களை பொருத்தவரையில் திருமணத்திற்கு வருபவர்களுக்கு தாம்பூல பையில் வெற்றிலை, பாக்கு, இனிப்புகள், பழம் போன்ற பொருட்களை வைத்து கொடுத்து வழி அனுப்புவது வழக்கம். அந்த வகையில், புதுச்சேரியில் நடைபெற்ற திருமண ரிசப்ஷன்நிகழ்ச்சி ஒன்றில் நூதன முறையில் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. இது அங்கு வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வகையில், புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திருமணத்திற்கு வந்தவர்களுக்கு தாம்பூல பையில் தேங்காய், பழங்களுடன் மது பாட்டிலும் அதனுடன் பிஸ்கட் பாக்கெட் வைத்து கொடுத்துள்ளனர். இது திருமணத்திற்கு வந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் இது போன்ற நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும் என்று இந்த நிகழ்விற்கு வந்த உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025