கர்நாடகாவின் பாதுகாப்பான எதிர்காலம் மக்களின் நலன் மட்டுமே எங்களின் முக்கிய நோக்கம்- டி.கே.சிவகுமார் ட்வீட்

கர்நாடகாவின் பாதுகாப்பான எதிர்காலம், மக்களின் நலன் மட்டுமே எங்களின் முக்கிய நோக்கம் என டி.கே.சிவகுமார் ட்வீட்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையிலும், கடந்த 5 நாட்களாக புதிய முதல்வர் யார் என காங்கிரஸ் தலைமை அறிவிக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில், தற்போது கர்நாடகா முதல்வர் மற்றும் துணை முதல்வர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் டெல்லியில் செய்தியாளர்கள் முன்னிலையில் பேசுகையில், காங்கிரஸ் தலைமை கர்நாடக முதல்வராக சித்தராமையாவை தேர்ந்தெடுத்து உள்ளதாகவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமாரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து, துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ள டி.கே.சிவகுமார் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கர்நாடகாவின் பாதுகாப்பான எதிர்காலம், மக்களின் நலன் மட்டுமே எங்களின் முக்கிய நோக்கம். மக்களின் நலன், எதிர்காலத்தை உறுதி செய்ய நாங்கள் ஒன்றிணைந்துள்ளோம் என ட்வீட் செய்து மல்லிகார்ஜுனே கார்கேவுடன் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் கைகோர்த்து நிற்கும் படத்தை பகிர்ந்துள்ளார்.
Karnataka’s secure future and our peoples welfare is our top priority, and we are united in guaranteeing that. pic.twitter.com/sNROprdn5H
— DK Shivakumar (@DKShivakumar) May 18, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025