Parliment Special Session : பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர்.!

Parliment of India

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் இன்று (செப்டம்பர் 18) முதல் வரும் வெள்ளி (செப்டம்பர் 22) வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு கூட்டத்தொடர் முதலில் அறிவிக்கப்படும் போது நிகழ்ச்சி நிரல் பற்றி குறிப்பிடப்படவில்லை. அதன் பிறகு நிகழ்ச்சி நிரல் குறிப்பிடப்பட்டது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், சிறப்பு கூட்டத்தொடர் பற்றிய நிகழ்ச்சி நிரலானது வெளியிடப்பட்டது. அதில் நாடாளுமன்றம் துவங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆனதை குறிப்பிட்டு முதல் நாளில் விவாதிக்கப்படும் என்றும், தலைமை தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான மசோதா பற்றி இரு அவைகளிலும் விவாதிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.

இது தவிர மற்ற சில மசோதாக்களும் பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டமானது முதல் நாள் மட்டும் பழைய கட்டிடத்திலும், மற்ற நான்கு நான்களும் புதியதாக கட்டப்பட்டுள்ள நாடாளுமன்றத்திலும் நடைபெற உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கம்போல, நாடாளுமன்ற கூட்டத்தில் இதற்கு முன்னதாக நாடாளுமன்ற கூட்டத்தினரை எந்தவித பிரச்சனையும் இல்லாமல் விவாதித்து நடத்தி முடித்து தர வேண்டும் என்று அனைத்து கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்படும். அதேபோல நேற்று டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த சிறப்பு கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரல் சரிவர குறிப்பிடப்படாததால் சில அதிரடி மசோதாக்கள் திடீரென விவாதத்திற்கு கொண்டுவரப்படும் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்