Cauvery Water Issue : காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்.! மத்திய அமைச்சரை சந்திக்கும் தமிழக அனைத்து கட்சி எம்பிக்கள் குழு.!

கடந்த சில மாதங்களாகவே கர்நாடகா அரசு உச்ச நீதிமன்ற உத்தரவுபடி காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அளிக்க வேண்டிய உரிய அளவு தண்ணீரை தராமல் இருந்து வருகிறது. இதனால் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசு, காவிரி ஒழுங்காற்று மையம், காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றில் முறையிட்டு நமக்கான கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடகாவிற்கு உத்தரவிடக் கோரி தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பிக்கள் அடங்கிய குழு தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தவுள்ளனர்.
அதன்படி, இன்று காலை 10 மணிக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமையில், அதிமுக சார்பில் தம்பிதுரை, மதிமுக சார்பில் வைகோ , விசிக சார்பில் திருமாவளவன், தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஜி.கேவாசன், காங்கிரஸ் தலைமையில் ஜோதி மணி, கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகள், முஸ்லீம் லீக் பிரதிநிதிகள், கொங்கு நாடு கட்சி பிரதிநிதிகள் ஆகியோர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை டெல்லியில் நேரில் சந்தித்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட கோரி வலியுறுத்தவுள்ளனர்.