இமாச்சல பிரதேசத்தில் பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர்…!

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் அனுப் கேசரி, பொதுச் செயலாளர் சதீஷ் தாக்கூர் மற்றும் உன்னா மாவட்டத் தலைவர் இக்பால் சிங் பாஜகவில் இணைந்துள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் அனுப் கேசரி, பொதுச் செயலாளர் சதீஷ் தாக்கூர் மற்றும் உன்னா மாவட்டத் தலைவர் இக்பால் சிங் உள்ளிட்ட மூவரும் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா இல்லத்தில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.
கடந்த மாதம், ஆம் ஆத்மி கட்சி இமாச்சலப் பிரதேசத்தில் தனது கட்டமைப்பை வலுப்படுத்த எட்டு பேர் கொண்ட குழுவை நியமித்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் அனுப் கேசரி, பொதுச் செயலாளர் சதீஷ் தாக்கூர் மற்றும் உன்னா மாவட்டத் தலைவர் இக்பால் சிங் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த ஆண்டு இறுதியில் இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025