bus falls from a bridge in Khargone [Image Source : Twitter/@ANI]
கார்கோனில் பாலத்தில் இருந்து பேருந்து விழுந்ததில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மத்தியபிரதேச மாநிலத்தில் கார்கோன் மாவட்டத்தில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. போராட் ஆற்றின் 50 அடி உயர பாலத்தில் இருந்து பயணிகள் பேருந்து ஒன்று கீழே விழுந்தது. இதனால் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். முதற்கட்ட தகவல்களின்படி 15 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது.
எம்பி10-பி-7755 என்ற பேருந்து எண் கார்கோனிலிருந்து இந்தூருக்குச் சென்று கொண்டிருந்தபோது கார்கோன்-திக்ரி சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. பேருந்து ஆற்றின் மீது உள்ள பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென கீழே விழுந்தது. இதனால் அப்போது பலத்த சத்தம் ஏற்பட்டது.
இதனையடுத்து, கிராம மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காயமடைந்தவர்களுக்கு உதவி செய்யும் பணியில் கிராம மக்களுடன் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, மீட்பு பணி நடந்து வருகிறது.
இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலரும் படுகாயம் அடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை 20 ஆக உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் டிரைவர், கண்டக்டர், கிளீனர் ஆகியோரும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கார்கோனில் நடந்த பேருந்து விபத்துக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இரங்கல் தெரிவித்துள்ளார் மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.
லண்டன் : ஜோ ரூட் இங்கிலாந்து மற்றும் இந்தியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டியூக்ஸ் பந்து அடிக்கடி வடிவம்…
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…