AdityaL1 [image source:x/@ISROSight]
ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளியின் அருகே திட்டமிட்டபடி இன்று மாலை நிலைநிறுத்தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அறிவித்துள்ளது. முதல் முறையாக இஸ்ரோ, சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற அதிநவீன விண்கலத்தை வடிவமைத்தது. இந்த விண்கலம் பி.எஸ்.எல்.வி சி-57 ராக்கெட் மூலம் கடந்த செப். 2-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த விண்கலத்தை பூமியில் இருந்து சுமார் 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One) எனும் எல்-1 புள்ளிக்கு மிக அருகே நிலைநிறுத்த இஸ்ரோ முடிவு செய்தது. அதன்படி, 127 நாட்களாக பல்வேறு கட்டங்களை கடந்து, சூரியனை நோக்கி சீரான வேகத்தில் பயணித்து வரும் ஆதித்யா விண்கலம், தற்போது எல்-1 புள்ளிக்கு அருகே உள்ளது.
கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட சரக்கு கப்பல் மீட்பு… வெளியான வீடியோ!
இந்த நிலையில், சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா விண்கலம், பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள எல்-1 புள்ளிக்கு மிக அருகே இன்று மாலை நிலைநிறுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. அதாவது, எல்-1 புள்ளியை மையமாகக் கொண்ட சூரிய ஒளி வட்டப் பாதையில் (Halo Orbit) இன்று மாலை 4 மணியளவில் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது.
இந்த அறிவிப்பை இஸ்ரோ தனது எக்ஸ் தலத்தில் வெளியிட்டுள்ளது. அதில், இன்று மாலை 4 மணியளவில், இஸ்ரோ ஆதித்யா-எல்1 விண்கலத்தை எல்1 புள்ளியைச் சுற்றியுள்ள ஹாலோ சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்கான இறுதி கட்டத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. லாக்ராஞ்சியன் புள்ளி என்பது பூமிக்கும், சூரியனுக்குமான ஈர்ப்பு விசைகள் சமநிலையை அடையும் பகுதியாகும்.
எனவே, ஆதித்யா விண்கலம் எல்-1 இன்று மாலை 4 மணி அளவில் சூரியனை ஆய்வு செய்யும் பணியில் விண்கலம் ஈடுபடும் எனவும் இஸ்ரோ அறிவித்துள்ளது. இது வெற்றிகரமாக எல் 1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு இது செயல்படும். இது இந்தியாவிற்கு மட்டுமல்ல, உலகிற்கும் மிகவும் முக்கியமான அனைத்து தரவுகளையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…