உ.பி முதல்வர் யோகி செய்யும் யோகா வீடீயோ… என்ஜாய் என ட்விட்டரில் பகிர்ந்த அகிலேஷ் யாதவ்.!

உத்தரபிரதேச முதல்வர் யோகா செய்ய சிரமப்படும் வீடீயோவை அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
ஜூன் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச யோகாதினம் அனுசரிக்கப்பட்டதை அடுத்து, உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூரில் நடைபெற்ற யோகா தின நிகழ்வில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொண்டு யோகாசனங்கள் செய்தார். அப்போது யோகாசனம் செய்வதற்கு முதல்வர் யோகி சிரமப்பட்டுள்ளார்.
இதனை சமாஜ்வாதி கட்சியின் தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டரில் வீடியோவாக பகிர்ந்துள்ளார். முதல்வர் யோகியின் யோகாசன வீடீயோவை டேக் செய்து யோகாவை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Enjoy Yoga pic.twitter.com/j8RfcMScCs
— Akhilesh Yadav (@yadavakhilesh) June 23, 2023