கொரோனா வைரஸ் இன்னும் நீங்கவில்லை,மீண்டும் பரவி வருகிறது என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
கொரோனா தொற்றுநோயின் மூன்றாவது அலைக்கு மத்தியில் மாநிலங்கள் கொரோனா கட்டுப்பாட்டு தளர்வுகளை அறிவித்துள்ள நிலையில்,கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் மக்கள் தங்கள் பாதுகாப்பைக் குறைக்க வேண்டாம் என்றும்,கொரோனா வைரஸ் இன்னும் நீங்கவில்லை, மீண்டும் பரவி வருகிறது என்று பிரதமர் மோடி எச்சரித்துள்ளார்.
இது தொடர்பாக,குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி கூறுகையில்:”கொரோனா வைரஸ் நம்மை விட்டு இன்னும் முழுமையாக நீங்கவில்லை.மீண்டும் அது உருமாறி பரவி வருகிறது.மக்கள் அனைவரும் கொரோனாவுக்கு எதிரான தங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிறுத்திவிட வேண்டாம். ஏனெனில்,கொரோனா மீண்டும் மீண்டும் வரும் தன்மையுடன் இருக்கிறது.அந்த வகையில் கொரோனா எப்போது மீண்டும் தோன்றும் என்று யாருக்கும் தெரியாது,”,என்று கூறினார்.
எனினும்,நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கிட்டத்தட்ட 185 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது பொதுமக்களின் ஆதரவின் காரணமாக சாத்தியமானது” என்று கூறியுள்ளார்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…