#Big Breaking:புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ்

புதுச்சேரியில் 1 முதல் 9 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கும், தேர்வில் தேர்ச்சி பெறும் முறையை அறிவிப்பதற்கும் பள்ளி கல்வி இயக்குநரகம் சமர்ப்பித்த திட்டத்திற்கு புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணையில் ,புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் அனைத்து பகுதிகளிலும் 1 முதல் 9 வரையிலான வகுப்புகளின் மாணவர்கள் “ஆல் பாஸ்” என்று அறிவிக்கப்படுகிறார்கள். புதுச்சேரி மற்றும் காரைக்கலில் 10 & 11 வகுப்பு மாணவர்கள் தமிழக வாரியத்தின் வழிகாட்டுதலின்படி தேர்ச்சி பெறுவார்கள்.
மகே மற்றும் யானம் பிராந்தியங்களைச் சேர்ந்த 10 & 11 ம் வகுப்பு மாணவர்கள் முறையே கேரளா மற்றும் ஆந்திரப் பிரதேச வாரியங்களின் வழிகாட்டுதலின் படி தேர்ச்சி பெறுவார்கள்.
பள்ளிகள் ஒரு வாரத்தில் 5 நாட்கள் செயல்படும், சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும். 1 “முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு 2021 மார்ச் 31 வரை பள்ளிகள் செயல்படும். கோடை விடுமுறை 1” ஏப்ரல் 2021 முதல் தொடங்கும்.
இருப்பினும், அந்தந்த மாநில வாரியங்களின் தேர்வுகளின் அட்டவணைப்படி 10, 11 & 12 வகுப்புகள் நடத்தப்படும்.
#Puducherry Lt. Guv issues order declares classes I – IX ALL PASS
Classes 10 and 11 Puducherry and Karaikal will be declared pass as per TN Board
Classes10 and 11 for Mahe will be declared pass as per guidelines of Kerala and AP #exams2021 #PuducherryExams #PuducherryElections pic.twitter.com/hF400PipNU
— Apoorva Jayachandran (@Jay_Apoorva18) March 11, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025