கர்நாடகாவில் 5 மாதத்திற்கு பின் அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்வு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், கர்நாடகாவில், கொரோனா வைரஸ் பாதிப்பால், 2.85 லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 4 ஆயிரத்திற்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அம்மாநில அரசு 5 மாதத்திற்கு பின், கொரோனா வைரசை கட்டுப்படுத்த போடப்பட்ட அணைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து, கர்நாடக அரசின் சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் ஜாவேத் அக்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநிலத்தில் கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விதிக்கப்பட்ட அனைத்து போக்குவரத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படுகின்றன. இனி வெளி மாநிலங்களில் இருந்து கர்நாடக மாநிலத்துக்குள் வருவதற்கு இ-பாஸ் தேவையில்லை.
கர்நாடகஅரசின் சேவா சிந்து இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டியதும் இல்லை. அதேபோல் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியதும் இல்லை. எனவே வெளிமாநிலங்களில் இருந்து வருவோருக்கு இனி கைகளில் சீல் வைக்கப்படாது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், கர்நாடக மாநில எல்லைகள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் அமைக்கப்பட்டு இருந்த மருத்துவ பரிசோதனை முகாம்கள் நீக்கப்படுகின்றன. இனி கர்நாடகாவுக்கு சாலை மார்க்கமாகவும், விமானம், ரயில் மூலமாகவும் வருவதற்கு எந்த தடையும் இல்லை.
கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி தங்களுக்கு இருந்தால் அதுதொடர்பாக, அரசின் உதவி மையத்தை 14410 என்ற தொலைபேசி எண்ணில்தொடர்பு கொண்டு விவரங்களை பதிவு செய்ய வேண்டும். ஆனால், அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். பொது இடங்களில் தனிநபர் இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். அடிக்கடி சோப்பைக் கொண்டு கைகழுவதுடன், சானிடைசர் பயன்படுத்தவேண்டும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…