கொரோனா காலர் ட்யூனில் அமிதாப்பச்சன் வாய்ஸ் – டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு.!

Default Image

அமிதாப்பச்சனின் குரலுடன் வரும் கொரோனா காலர் ட்யூனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா விழிப்புணர்வு குறித்த அமிதாப் பச்சனின் காலர் ட்யூனை நீக்க டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை ராகேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ளார். அதில், கொரோனா விழிப்புணர்வு குறித்த அமிதாப் பச்சனின் காலர் ட்யூனை, நீதியின் நலனுக்காக மொபைலில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சன் அத்தகைய சேவைக்கு பொருத்தமானவர் அல்ல, அதற்காக அவர் பணம் வசூலிக்கிறார். ரிங்டோனில் இதுபோன்ற தடுப்பு நடவடிக்கைகளை பேசுவதற்கு இந்திய அரசு அமிதாப் பச்சனுக்கு கட்டணம் செலுத்தி வருகிறது. சில கொரோனா போர் வீரர்கள் தேசத்திற்கு பெரும் சேவையைச் செய்து வருகிறார்கள். சிலர் தங்கள் கடினமாக உழைத்து பெற்ற வருமானத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு கொடுத்துள்ளனர்.

மேலும், பிரபலமான கொரோனா தடுப்பு வீரர்கள் எந்தவொரு கட்டணமும் இன்றி தங்கள் சேவையை வழங்க இன்னும் தயாராக உள்ளனர். மூத்த நடிகருக்கு “சுத்தமான வரலாறு” இல்லை, ஒரு “சமூக சேவகர்” என்று தேசத்திற்கு சேவை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். வழக்கறிஞர்கள் ஏ.கே. துபே, பவன் குமார் மூலம் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் ஜனவரி 18 ஆம் தேதி விசாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05122024
vijaya (21) (1)
T. M. Anbarasan
Pattinampakkam Youngster Died
rohit ravi shastri
gold price dec 5
Pushpa 2 Twitter Review