ஆந்திராவில் ராசாயன ஆலையில் தீ விபத்து.
ஆந்திராவின் விசாகப்பட்டினத்தின் புறநகர் பகுதியில் உள்ள, பரவாடாவின் ராம்கி பார்மா நகரில் அமைந்துள்ள ரசாயன ஆலையில் உள்ள உலகைளில் ஒரு உலை வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்து நடந்த போது, அங்கு 4 பேர் பணியில் இருந்துள்ளனர். இந்த விபத்தில் அந்த நான்கு பேரும் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், இரண்டு மாதங்களில் மாவட்டத்தில் இதுபோன்ற மூன்றாவது விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், விசாகப்பட்டினத்தின் புறநகரில் உள்ள பரவாடாவின் ராம்கி பார்மா நகரில் அமைந்துள்ள ரசாயன ஆலையில் மருந்து பிரிவுகளில் இருந்து கழிவுகளை அகற்றும் போது இரவு 11 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறுகையில், இந்த விபத்து நடந்த போது, அங்கு பணியில் இருந்த நான்கு பேரும் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நான்கு பேரில் ஒருவருக்கு பாலத்தை காயம் ஏற்பட்ட நிலையில், அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வி வினய் சந்த் கூறுகையில், ஆலையில் ஐந்து உலைகள் இருந்தன, அவற்றில் ஒன்று வெடித்தது என்றும், இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன், முழு மாவட்ட நிர்வாகமும் எச்சரிக்கப்பட்டு, தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் தெரிவித்துள்ளார்.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…