நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவிலான பாதிப்புகளையும் இழப்புகளையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது கொரோனா வைரஸ் மூன்றாம் அலை விரைவில் வர உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் மற்றும் தடுப்பூசி, கருப்பு பூஞ்சை, மூன்றாம் அலை ஆகியவை குறித்த முன்னெச்சரிக்கை தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ஆந்திர மாநிலத்தால் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது ஆந்திர அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் இதற்கு பதில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த பதில் மனுவில், கொரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் எனவும், புதிதாக 26,325 மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் நியமனம் செய்வதன் மூலம் மூன்றாம் அலையை திறமையாக எதிர்கொள்வோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆந்திராவில் 1,955 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், இதில் 109 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1,300 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா மூன்றாம் அலையில் அதிக அளவில் சிறுவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டிருந்தாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், ஆதார் அட்டை இல்லாத முதியவர்களுக்கு கூட கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கு ஆந்திர அரசு முடிவு செய்துள்ளதாகவும் அந்த பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.
சென்னை : இன்ஸ்டாகிராம் பிரபலமான இலக்கியா, ஜூலை 24, 2025 அன்று சென்னையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதற்கு தமிழ்…
சென்னை : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில், கடந்த ஜூலை 12, 2025 அன்று 8 வயது சிறுமி பள்ளி…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு, இயக்குநர் சேரன் இயக்கத்தில் ‘அய்யா’…
பீகார் : மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியின் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் 65.20 லட்சம்…
கேரளா : மாநிலம் கண்ணூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி கோவிந்தசாமி இன்று 25 அடி உயர…
சென்னை : அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில், மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் மற்றும் அவரது கங்கை வெற்றியின் ஆயிரமாவது ஆண்டு…